மக்களை துன்புறுத்துவது அரசின் நோக்கமல்ல... ஈபிஎஸ் வேதனை!

Webdunia
திங்கள், 6 ஏப்ரல் 2020 (17:44 IST)
அரசு போடும் உத்தரவு மக்களின் நன்மைக்காகவே தவிற மக்களை துன்புறுத்தும் நோக்கம் அரசுக்கு இல்லை என முதல்வர் பேசியுள்ளார். 
 
கொரோனா பாதுகாப்பு நடவடிக்கையாக ஏப்ரல் 14 வரை நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் ஊரடங்கை பின்பற்றி மாவட்ட எல்லைகள் மூடப்பட்டுள்ளன. அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதை தவிர்த்து வேறு எதற்காகவும் மக்கள் வெளியே வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 
ஆனால் அதையும் மீறி மக்கள் அடிக்கடி சாலைகளில் திரிந்து வருவதால் போலீஸார் கைது நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர். தமிழகத்தில் ஊரடங்கை மீறியதாக இதுவரை 90,918 பேர் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளனர். 82,572 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
இந்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, அரசு ஒரு உத்தரவு போடுகிறது என்றால் அது மக்களின் நன்மைக்காகவே, மக்களை துன்புறுத்த வேண்டும் என்பது அரசின் நோக்கம் அல்ல. மக்கள் இதை புரிந்துக்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்