சமீபத்தில் நடந்த 'நேரு வளர்ச்சி மாடல்' என்ற புத்தக வெளியீட்டு விழா டெல்லியில் நடைபெற்றது. இந்த விழாவில் வீடியோ கான்பரன்ஸ் மூலம் கலந்துகொண்ட வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், "அந்த காலத்தில் இருந்த பொருளாதார கொள்கைகள் தற்போதைய நடைமுறைக்கு சரியாக வராது என சீனா, ரஷ்யா போன்ற நாடுகளே தங்களுடைய கொள்கைகளை மாற்றிக்கொண்டன. ஆனால் நம் நாட்டில் மட்டும் அப்போது இருந்த கொள்கைகளில் இருந்து விடுபட முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை.
நேருவின் வளர்ச்சி கொள்கைகள் நம் வெளியுறவு கொள்கை வரை விரிந்து இருந்தது. இது தவிர, அரசியல் நிர்வாகம், திட்டக் கமிஷன் உள்பட அவை அனைத்திலும் ஊடுருவி இருந்தது. நேரு மாடல் தோல்வி அடைந்துவிட்டது. கடந்த 33 ஆண்டுகளில் அவரது கொள்கைகள் எடுபடவில்லை.
எனவே, நேருவின் கொள்கைகள் தோல்வி அடைந்துவிட்டதே உணர்ந்து, 2014-இல் இருந்து அதை சீர்திருத்த முயற்சிகளை தொடங்கியுள்ளோம். இதற்கான நடவடிக்கைகளையும் எடுத்துள்ளோம். வெளியுறவுத்துறை கொள்கையிலும் நம் நிலைப்பாட்டை மாற்றியுள்ளோம்," என்று பேசினார்.