40 தொகுதிகளிலும் அதிமுக தலைமையில் தான் கூட்டணி: எடப்பாடி பழனிசாமி உறுதி..!

Webdunia
திங்கள், 17 ஏப்ரல் 2023 (19:02 IST)
தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரி என மொத்தம் உள்ள 40 தொகுதிகளிலும் அதிமுக தலைமையில் தான் கூட்டணி அமைக்கப்படும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். 
 
தமிழகத்தை பொறுத்தவரை இதுவரை அதிமுக மற்றும் திமுக தலைமையில் தான் தேர்தல் கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது என்பதும் இந்த இரண்டு கூட்டணிகளை தவிர மூன்றாவது கூட்டணி தேர்தலை சந்தித்து வென்றதாக சரித்திரம் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
ஆனால் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சமீப காலமாக பாஜக தலைமையில் தான் கூட்டணி அமைக்கப்படும் என்று கூறி வருகிறார். இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் அதிமுக தலைமையில் தான் உறுதியாக மெகா கூட்டணி அமையும் என்று தெரிவித்தார். அவரது இந்த பேச்சை பாஜகவினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Edappadi Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்