மணல் கொள்ளை விவகாரம்: 5 மாவட்ட ஆட்சியர்கள் வாக்குமூலங்களை பதிவு செய்த அமலாக்கத்துறை..!

Mahendran
வெள்ளி, 26 ஏப்ரல் 2024 (09:53 IST)
மணல் கொள்ளை விவகாரத்தில்  5 மாவட்ட ஆட்சியர்கள் வாக்குமூலங்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
மணல் கொள்ளை தொடர்பாக 5 மாவட்ட ஆட்சியர்களிடம் 10 மணிநேரம் விசாரணை நடைபெற்ற நிலையில் குவாரிகளில் மணல் எடுப்பது தொடர்பாக கனிம வளம், மாசு கட்டுப்பாட்டு வாரியம், தாசில்தார் உள்ளிட்ட பல அதிகாரிகளை கடந்த பின்பே தங்களிடம் வருவதாக ஆட்சியர்கள் கூறியதாகவும் தெரிகிறது.
 
மேலும் ஆட்சியர்களின் வாக்குமூலத்தின் அடிப்படையில் நீர்வளம், மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், வருவாய் துறை அதிகாரிகளையும் விசாரணை வளையத்திற்குள் கொண்டுவர அமலாக்கத்துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
 
இந்த நிலையில் 5 மாவட்ட ஆட்சியர்களிடமும் ரூ.4,000 கோடிக்கான மணல் முறைகேடு குறித்த வாக்குமூலங்களை பதிவு செய்து கையெழுத்தை பெற்ற அமலாக்கத்துறை அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசனை செய்து வருகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்