முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்... கணவரை கண்டு கண்ணீர் வடித்த துர்கா ஸ்டாலின்!

Webdunia
வெள்ளி, 7 மே 2021 (09:55 IST)
தமிழக முதல்வராக ஸ்டாலின் பதவியேற்றுக்கொண்ட போது அதை கண்டு அவரது மனைவி துர்கா ஸ்டாலின் ஆனந்த கண்ணீர் வடித்தார். 

 
தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்ற நிலையில் மு.க.ஸ்டாலின் இன்று முதலமைச்சராக முதன் முறையாக பதவியேற்கிறார். பதவியேற்பு முடிந்து சென்னை கடற்கரை சாலையில் உள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும் அண்ணா நினைவிடங்களில் மரியாதை செலுத்த உள்ளார்.
 
தற்போது தமிழக ஆளுனர் பன்வாரிலால் புரோகித் முன்பாக அவர் பதவியேற்ற நிலையில் அடுத்தடுத்து அமைச்சர்கள் பதவியேற்பு நடந்து வருகிறது. இந்நிலையில் மு.க.ஸ்டாலின் முதல்வராக பதவியேற்றதை தொடர்ந்து அவரது கார் முகப்பில் இருந்து திமுக கொடி நீக்கப்பட்டு தேசிய கொடி பொருத்தப்பட்டுள்ளது.
 
'முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்' எனும் நான் என கூறி தமிழக முதல்வராக ஸ்டாலின் பதவியேற்றுக்கொண்ட போது அதை கண்டு அவரது மனைவி துர்கா ஸ்டாலின் ஆனந்த கண்ணீர் வடித்தார். மேலும் சமூக வலைத்தளத்தில் ஸ்டாலின் எனும் நான் என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்