கோயிலுக்குச் செல்பவர்கள் திமுகவுக்கு வாக்களிக்க வேண்டாம்: சொன்னாரா ஸ்டாலின்

Webdunia
வியாழன், 22 மார்ச் 2018 (22:29 IST)
ராமராஜ்ய ரதயாத்திரையை கடுமையாக எதிர்த்த கட்சிகளில் ஒன்று திமுக. அதன் செயல்தலைவர் ரத எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டு கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பாஜக ஆதரவாளர்கள் சிலர், இந்து மத ரதத்தை எதிர்க்கும் திமுக, இந்து மத மக்களின் ஓட்டுக்களை வேண்டாம் என்று கூறுமா? என்ற கேள்விகளை முன்வைத்தனர்.

இந்த நிலையில் 'கோயிலுக்குச் செல்பவர்கள் திமுகவுக்கு வாக்களிக்க வேண்டாம், அவர்கள் வாக்கு திமுகவுக்கு தேவை இல்லை என ஸ்டாலினின் டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டிருந்ததாக வதந்திகள் பரவியது. பின்னர் இதுகுறித்து விசாரித்தபோது இது ஸ்டாலின் பெயரால் உருவாக்கப்பட்ட போலி பக்கம் என்றும் யாரோ மர்ம நபர்கள் போட்டோஷாப்பில் இதுபோன்ற விஷமத்தனமாக தயார் செய்து வாட்ஸ் அப் வலைத்தளம், முகநூலில் பரவ விட்டிருந்ததும் தெரிய வந்துள்ளது.

இது குறித்து திமுக தலைமையின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டபோது, இதனை  பார்த்து அதிர்ச்சி அடைந்த மு.க.ஸ்டாலின் உடனடியாக மறுப்பு தெரிவித்துள்ளதோடு காவல் ஆணையரிடம் புகாரும் அளித்துள்ளார். ஸ்டாலின் புகாரை அடுத்து இதுகுறித்து சைபர் க்ரைம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்