இயலாமையா? இழிவான அரசியலா? மத்திய அரசுக்கு கமல் கேள்வி

Webdunia
வியாழன், 22 மார்ச் 2018 (20:45 IST)
நடிகர் கமல்ஹாசன் புதிய கட்சி ஆரம்பித்ததில் இருந்தே மாநில அரசை மட்டுமே அதிகம் விமர்சித்து வருவதாகவும், மத்திய அரசு தமிழகத்திற்கு செய்யும் துரோகங்களை கண்டுகொள்வதில்லை என்றும் ஒருசில அரசியல்வாதிகளால் விமர்சிக்கப்பட்டார்.

இந்த நிலையில் காவிரி மேலாண்மை விஷயத்தில் மத்திய அரசை கமல் கடுமையாக சாடி இன்று ஒரு டுவீட்டை பதிவு செய்துள்ளார். அவர் கூறியதாவது: பாகிஸ்தானோடு, வங்கதேசத்தோடு நதி நீரைப் பகிர்ந்து கொள்ளும் இந்தியா, தன் நாட்டுக்குள் தமிழகத்திற்கும் கர்நாடகத்திற்கும் காவிரி நீரைப் பகிர்ந்து தர முடியாதா ? இது இயலாமை அல்ல ; இழிவான அரசியல் . கர்நாடகத்து நாற்காலிக்காக நடத்தும் நாடகம்

கர்நாடக மாநில தேர்தலுக்காக இழிவான அரசியலை செய்வதாக கமல்ஹாசன் மத்திய அரசை நேரடியாக தாக்கியுள்ளதால் பாஜகவினர்களிடம் இருந்து எதிர்த்தாக்குதல் விரைவில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்