கனமழை எதிரொலி: இன்று எந்தெந்த பகுதிகளில் பள்ளிகள் விடுமுறை?

Webdunia
புதன், 15 நவம்பர் 2023 (07:28 IST)
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் நேற்று முதல் மிதமான மழை முதல் கனமழை வரை பெய்து வருகிறது. இதனால் பள்ளி கல்லூரிகளுக்கும் விடுமுறை குறித்த அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன என்பதையும் பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில் இன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பு சற்றுமுன் வெளியாகியுள்ளது. முதல் கட்டமாக சென்னையில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை என்றும் கல்லூரிகள் வழக்கம் போல் இயங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் அதே நேரத்தில் கனமழை காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை என்று  மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.

அதேபோல் புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  விழுப்புரம், காஞ்சிபுரம் உள்ளிட்ட சில மாவட்டங்களில் மிதமான மழை பெய்து வந்தபோதிலும் இன்று பள்ளி மற்றும் கல்லூரிகள் வழக்கம் போல் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்