இனிமேல், தமிழகத்தில் திராவிட கட்சிகளுக்கு எதிர்காலம் இல்லை என தமிழக பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் கருத்து தெரிவித்துள்ளார்.
பாஜக கட்சி சார்பில் கோவையை அடுத்த குளத்துப்பாளையத்தில் பொதுக் கூட்டம். இதில் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் கலந்து கொண்டு பேசினார். முன்னதாக அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் திமுக மற்றும் அதிமுக-வை தோற்கடிக்க வலுவான கூட்டணியை அமைத்தோம். மேலும், மோடி அலை காரணமாக 14 சதவீத வாக்குகள் எங்கள் கூட்டணிக்கு கிடைத்தன. இந்த வாக்குகளின் உரிமையை கொண்டாட பாஜக-வுக்கு மட்டுமே முழு உரிமை உண்டு.
திமுக - திமுக மீது ஊழல் உள்பட பல வழக்குகள் உள்ளன. இதனால் அவைகள் மீது தமிழக மக்களுக்கு வெறுப்பு ஏற்பட்டு உள்ளது. எனவே, அவர்களை இந்த தேர்தலில் தூக்கி எறிவது உறுதி. இனிமேல், தமிழகத்தில் திராவிட கட்சிகள் ஆட்சி அமைக்கவே முடியாது. தேசிய கட்சிகளுக்கே வாய்ப்பு கிடைக்கும்.
தற்போது, பாஜக-வை விட்டு சில கட்சிகள் வெளிறினாலும், பாஜகவுக்கு எந்தவித நஷ்டமும் இல்லை. தற்போது 54 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துவிட்டோம். ஏப்ரல் 5 அல்லது 6 ஆம் தேதியில் டெல்லியில் மத்திய குழு கூடி மீதி வேட்பாளர்களை அறிவிப்பார்கள் என்றார்.