செவ்வாயில் மனித கால்கள் பட வேண்டிய நேரம்? நாசாவுக்கா? ஸ்பேஸ் எக்ஸ்க்கா? - டொனால்டு ட்ரம்ப் அறிவிப்பு!

Prasanth Karthick

செவ்வாய், 21 ஜனவரி 2025 (09:21 IST)

அமெரிக்க அதிபராக பதவியேற்றுள்ள டொனால்டு ட்ரம்ப் விரைவில் செவ்வாயில் மனித காலடி தடம் பதிய உள்ளதாக தெரிவித்துள்ளார்.

 

 

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றிப்பெற்ற டொனால்டு ட்ரம்ப் மூன்றாவது முறையாக அமெரிக்காவின் அதிபராக பதவியேற்றுள்ளார். பதவியேற்ற முதல் நாளிலேயே LGBTQ சமூகத்திற்கு எதிரான தீர்மானங்கள், மெக்ஸிகோ எல்லை ஊடுறுவல் என பல விஷயங்களில் அவர் வெளியிட்டுள்ள அறிவிப்புகள் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.

 

இந்நிலையில் அடுத்த திட்டமாக செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்புவது குறித்து அவர் பேசியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர் “செவ்வாய் கிரகத்தில் அமெரிக்க கொடியை பறக்க விடுவோம். அமெரிக்காவின் நட்சத்திரங்களை செவ்வாய் கிரகத்தில் பதிக்க உள்ளோம். நட்சத்திரங்களையும், கோடுகளையும் பதிக்க அமெரிக்க வீரர்களை செவ்வாய் கிரகத்திற்கு அனுப்புவோம்” என பேசியுள்ளார்.

 

பிரபல தொழிலதிபரும், ட்ரம்ப் ஆதரவாளருமான எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் கடந்த சில ஆண்டுகளாகவே மனிதர்களை செவ்வாய் கிரகத்திற்கு அழைத்து செல்வதற்கான பால்கன் விண்கல தயாரிப்பு உள்ளிட்ட பலவற்றில் கவனம் செலுத்தி வருகிறது. இந்நிலையில் ட்ரம்ப்பின் இந்த விண்வெளி பயண அறிவிப்பு என்பது தனது நண்பர் எலான் மஸ்க்கிற்கு சலுகை செய்யும் அறிவிப்பாக இருக்கலாம் என கூறப்படுகிறது.

 

ஸ்பேஸ் எக்ஸின் எதிர்கால திட்டமிடல்களுக்காக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசாவுடன், ஸ்பேஸ் எக்ஸும் இணைந்து இந்த திட்டத்தை செயல்படுத்த வாய்ப்புகள் அதிகம் உள்ளது. ஏற்கனவே நாசாவின் பல விண்வெளி பயணங்களில் ஸ்பேஸ் எக்ஸின் பங்களிப்பு இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்