ரேசன் பொருட்கள் இவர்களுக்கு கிடையாது? அரசு விளக்கம்

Webdunia
புதன், 13 அக்டோபர் 2021 (20:09 IST)
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி நடந்து வருகிறது.இந்நிலையில், அரசு ஊழியர்கள், ஐந்து ஏக்கருக்கு மேல் நிலம் வைத்திருக்கும் விவசாயிகள்  மற்றும் ஆண்டு வருமானம் அதிகம் பெருவோருக்கு ரேசனில் அரிசி வழங்கப்படாது என ஒருதகவல் வாட்ஸ்ட் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

இதுகுறித்து தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. அதில், தற்போது அரிசி பெற்று வரும் அனைத்துக் குடும்ப அட்டைதார்களும் இலவச அரிசி மற்றும் மானிய விலையில் பெற்று வரும் அனைத்துப் பொருட்களையும் தொடர்ந்து பெறலாம் எனத் தெரிவித்துள்ளது.  

 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்