முதலீடுகள் ஈர்ப்பு என்று விளம்பரப்படுத்திக் கொள்ளும் திமுக- ராஜேஸ்வரி பிரியா

Sinoj
திங்கள், 8 ஜனவரி 2024 (14:05 IST)
திமுக தனது 2 வருட 8 மாத ஆட்சி காலத்தில் வேலைவாய்ப்பு தொடர்பாக தனது  தேர்தல் வாக்குறுதிகளில் கீழே குறிப்பிட்டுள்ள எதையாவது ஒன்றை நிறைவேற்றி உள்ளதா? என்று அனைத்து மக்கள் அரசியல் கட்சி தலைவர் ராஜேஸ்வரி பிரியா கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னையில்  உள்ள நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில்  ஜனவரி 7 மற்றும் 8 ஆகிய இரு தேதிகளில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னையில் நடைபெற்று வருகிறது.

இந்த மாநாட்டில் வெளிநாடுகளில் இருந்து பல தொழிலதிபர்கள் கலந்துகொண்டுள்ளனர். இதில் தமிழகத்தில்  முதலீடு குறித்த முக்கிய அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன.

இந்த நிலையில், திமுக தனது 2 வருட 8 மாத ஆட்சி காலத்தில் வேலைவாய்ப்பு தொடர்பாக தனது  தேர்தல் வாக்குறுதிகளில் கீழே குறிப்பிட்டுள்ள எதையாவது ஒன்றை நிறைவேற்றி உள்ளதா? என்று அனைத்து மக்கள் அரசியல் கட்சி தலைவர் ராஜேஸ்வரி பிரியா கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:
 
'உலக முதலீட்டாளர் சந்திப்பின் மூலம் 1000, 10000, 20000 கோடி முதலீடுகள் ஈர்ப்பு என்று விளம்பரப்படுத்திக் கொள்ளும் திமுக தனது 2 வருட 8 மாத ஆட்சி காலத்தில் வேலைவாய்ப்பு தொடர்பாக தனது  தேர்தல் வாக்குறுதிகளில் கீழே குறிப்பிட்டுள்ள எதையாவது ஒன்றை நிறைவேற்றி உள்ளதா? 
 
1) ஆண்டுக்கு 10 லட்சம் விகிதம் 5 ஆண்டுகளில் 50 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும். 
 
2) State Board of Skill Training and Employment Promotion (STEP) என்ற நிறுவனம் அரசால் தொடங்கப்பட்டு தொழிற்பயிற்சி மற்றும் வேலை வாய்ப்புக்காக செயல்படும்.
 
3) வேலைவாய்ப்பு அலுவலகங்கள் பயிற்சி மையங்களாக செயல்படும். 
 
4) தமிழகம் முழுவதும் உள்ள அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள பணியிடங்களில் 3 லட்சத்து 50 ஆயிரம் தமிழக இளைஞர்கள் நியமிக்கப்படுவர். 
 
5) தமிழகத்தில் நீர் நிலைகள், ஆறுகள், குளங்கள், ஏரிகள், ஓடைகள் உள்ளிட்ட அனைத்து நீர் வளங்களையும் வனம் உள்ளிட்ட இயற்கை வளங்களையும் பாதுகாக்கவும் கண்காணிக்கவும் அவை தொடர்பாக அரசின் சார்பாக தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் 12 ஆம் வகுப்பு தேர்வு பெற்ற 75 ஆயிரம் இளைஞர்கள் பணி அமர்த்தப்படுவர் இவர்களில் 30 ஆயிரம் இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்படும். 
 
6) தமிழகத்தில் உள்ள அனைத்து சாலைகள் பாலங்கள் உள்ளிட்ட பொது சொத்துக்களை பாதுகாக்கும் பணிகளில் 75 ஆயிரம் சாலை பணியாளர்கள் TNRDC நியமிக்கப்படுவர் இவர்களில் 30 ஆயிரம் இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்படும்.
 
7) தமிழகம் முழுவதும் அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோவில்கள் வழிபாட்டு தளங்களுக்கு சொந்தமான சொத்துக்களை கண்காணித்து பாதுகாக்கும் பணியில் 25 ஆயிரம் இளைஞர்கள் திருக்கோயில் பணியாளர்களாக பணியமர்த்தப்படுவர். 
 
8)மக்கள் நல பணியாளர்களாக 25,000 மகளிர் நியமிக்கப்படுவர் இவர்கள் அரசின் நலத்திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் அடிப்படை நிலையில் பணி அமர்த்தப்படுவர் இவர்கள் ஒவ்வொரு கிராமத்திலும் வட்டார வளர்ச்சி அலுவலர் (B.D.Os) கட்டுப்பாட்டில் செயல்படுவர். 
 
9) பள்ளிக்கல்வித்துறையில் தற்போது பகுதி நேர ஆசிரியர்களாக பணியாற்றி வரும் ஓவிய ஆசிரியர்கள், இசை ஆசிரியர்கள், உடற்பயிற்சி ஆசிரியர்கள் ஆகியோரை பணி நிரந்தரம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். 
 
10) படித்துவிட்டு வேலை தேடும் பெண்களுக்கு பணி வாய்ப்பை பெறுவதற்கு உரிய திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்குவதற்கும் அவர்கள் வேலை பெறுவதற்கும் உதவிடும் வகையில் மாவட்டம் தோறும் "அனிதா அச்சீவர்ஸ் அகாடமி" பயிற்சி நிலையங்கள் உருவாக்கப்படும்'' என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்