வைகோவுக்கு மாற்று இவரா ? – திமுகவின் அடுத்த மூவ் !

Webdunia
திங்கள், 8 ஜூலை 2019 (08:37 IST)
வைகோ ராஜ்யசபா உறுப்பினராவதில் புதிய சிக்கல் எழுந்துள்ளதால் திமுக தனது அடுத்தகட்ட நகர்வாக முக்கிய முடிவை எடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

திமுக கூட்டணி சார்பில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ராஜ்யசபா வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். ஆனால் அவர் மீதான தேசத்துரோக வழக்கில் ஓராண்டு சிறைத்தண்டனையும் ரூ.10ஆயிரம் தண்டனையும் மதிமுக விதிக்கப்பட்ட நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு ஒருமாதம் வரை நிறுத்தப்பட்டுள்ளது. ராஜ்யசபா தேர்தலில் போட்டியிட எந்தவித தடையும் இல்லை. இருப்பினும் தேசத்துரோக வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட ஒருவர் தார்மீக அடிப்படையில் எம்பி ஆவது சரியா? என ஒருசில அரசியல் கட்சி தலைவர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

அதுமட்டுமில்லாமல் பாஜக அரசு தேர்தல் ஆணையம் மூலம் வைகோவின் மனுவை நிராகரிக்க திட்டமிட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஒருவேளை அப்படி எதுவும் நடந்தால் அதற்குத் தயாராக இருக்க திமுக நினைக்கிறதாம். திமுகவின் சட்ட ஆலோசகரும் மூத்த வழக்கறிஞருமான என்.ஆர்.இளங்கோவை, ராஜ்யசபா தேர்தலுக்கான வேட்பு மனுவைத் தாக்கல் செய்ய திமுக தயார்படுத்தியுள்ளது. ஒருவேளை வைகோ மனு நிராகரிக்கப்பட்டால் இவர் ராஜ்யசபா வேட்பாளராகி விடுவார். வைகோ மனு ஏற்கப்பட்டால் இவர் தனது மனுவைத் திரும்ப பெற்றுக்கொள்வார் என வைகோவிடமே ஸ்டாலின் நேரடியாக சொல்லியுள்ளார். இதற்கு வைகோவும் ஒத்துக்கொள்ள வேட்புமனுத்தாக்கலுக்குக் கடைசி நாளான இன்று என்.ஆர்.இளங்கோ வேட்புமனுத்தாக்கல் செய்ய உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்