தினகரனின் அமமுகவிலிருந்து விலகிய முன்னாள் அமைச்சர் இசக்கி சுப்பையா, தனது ஆதரவாளர்களுடன் அதிமுகவில் இணையும் விழா இன்று நெல்லை மாவட்டம் தென்காசியில் நடந்தது. இந்த விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி,மற்றும் துணைமுதல்வர் ஓ பன்னீர்செல்வம் முன்னிலையில் தாய்க்கழகமான அதிமுகவில் இணைந்தனர்.
நாடு சுதந்திரம் அடைந்த பிறகு , வெற்றி கரமாக இயங்கிக்கொண்டிருக்கிற ஒரே இயக்கம் அதிமுகதான் என்று தெரிவித்தார். மேலும், ஒரு சாதாரண தொண்டன் முதல்வராக முடியும் என்றால் அது அதிமுகவில் மட்டும் தான் சாத்தியம் என்று தெரிவித்தார்.