பிரதமரை நரேந்திர என்று தான் அழைப்பேன்: திமுக எம்பி செந்தில்குமார்

Webdunia
திங்கள், 19 டிசம்பர் 2022 (12:52 IST)
பிரதமரை அனைவரும் நரேந்திர மோடி அல்லது மோடி என்று அழைத்து வரும் நிலையில் திமுக எம்பி செந்தில்குமார் நரேந்திர என்று மட்டுமே பிரதமரை அழைப்பேன் என்று கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
மக்களவையில் திமுக எம்பி செந்தில்குமார் பேசியபோது பிரதமரை ஜாதி பெயர் வைத்து அழைக்க மாட்டேன் என்று கூறியுள்ளார். பிரதமர் நரேந்திர என்றுதான் அழைப்பேன் என்றும், அவரது ஜாதி பெயர் தான் மோடி என்றும் ஜாதி பெயரை வைத்து நான் அழைக்க மாட்டேன் என்றும் எனவே பிரதமர் நரேந்திர என்று மட்டுமே அழைப்பேன் என்றும் அவர் கூறியுள்ளார்
 
மேலும் மனிதர்கள் மற்றவர்களை மனிதநேயத்தை வைத்து மட்டுமே மதிப்பிட வேண்டுமே தவிர ஜாதி அடையாளப் பெயர் வைத்து அல்ல என்றும் செந்தில் குமார் கூறியுள்ளார். மக்களவையில் அதிமுக எம்பி செந்தில்குமாரின் இந்த பேச்சு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்