பீகார் மாநிலத்தில் பாஜக கூட்டணியில் இருந்து விலகிய நிதிஷ்குமார் ஆர்ஜேடி, காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் சமீபத்தில் முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டார். ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் துணை முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.
இந்த அரசின் மீதான நம்பிக்கை மீதான வாக்கெடுப்பு சமீபத்தில் நடைபெற்றது. இதில், பெரும்பான்மைக்கு 122 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தேவை என்ற நிலையில் நிதிஸ்குமாருக்கு 160 எம்.எல்.ஏக்கள் ஆதரவு இருந்ததால், நம்பிக்கை மீதான வாக்கெடுப்பில் அவர் அரசு வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது.
இந்த நிலையில், கடந்த முறை பாராளுமன்றத் தேர்தலின்போதே நிதிஸ்குமார், பிரதமர் பதவிக்கு போட்டியிடுவார் என தகவல் வெளியானது.
தன்படி, 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் நான் போட்டியிடவில்லை; ஆனால், 2025 ஆம் ஆண்டு சட்டப்பேர்வை தேர்தல் தேஜஸ்வி தலைமையில் நடக்கும் என்று தெரிவித்துள்ளார்.