முகக்கவசத்தில் Ban NEET; விதை போட்ட டிரெண்ட் மன்னன் உதயநிதி!!

Webdunia
திங்கள், 14 செப்டம்பர் 2020 (11:01 IST)
Ban NEET, Save TN Students நீட் தேர்வுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய மாஸ்க்குடன் திமுக எம்எல்ஏக்கள் சட்டப்பேரவையில் பங்கேற்றனர். 
 
கொரோனா காரணமாக ஒத்துவைக்கப்பட்ட தமிழக சட்டப்பேரவையின் 3 நாள் கூட்டத்தொடர் சென்னை கலைவாணர் அரங்கில் இன்று தொடங்கியது. முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ், எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் மாஸ்க் அணிந்து பேரவையில் பங்கேற்றனர். 
Ban NEET, Save TN Students என நீட் தேர்வுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய மாஸ்க்குடன் திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் திமுக எம்எல்ஏக்கள் சட்டப்பேரவையில் பங்கேற்றனர். இது உதயநிதி ஸ்டாலினின் ஐடியாவாகும். 
 
ஆம், நீட் தேர்வு பயத்தால் தற்கொலை செய்துக்கொண்ட மாணவனின் குடும்பத்தை சந்திக்க சென்ற போது திமுக இளைஞர் அணி செயளாலர் உதயநிதி ஸ்டாலின் தனது மாஸ்க்கில் Ban NEET, Save TN Students என எழுதி அதனை அணிந்துக்கொண்டிருந்தார். இதனையே தற்போது சட்டப்பேரவை செல்லும் போது திமுகவினர் பின்பற்றியுள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்