கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் நடிகர் வடிவேல் பாலாஜி. வடிவேலு போன்ற தோற்றம் கொண்ட பாலாஜி தன் உடல்மொழியையும் வடிவேலு போல மாற்றிக்கொண்டு நகைச்சுவை நிகழ்ச்சிகளில் நடித்து வந்தார்.இவருக்கு கடந்த 15 நாட்களுக்கு முன் திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைவால் தனியார் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். தொடர்ந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற வசதி இல்லாததால் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சைக்கு மாற்றப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று மருத்துவமனையிலே இறந்துவிட்டார்.
அவரது குடும்பத்துக்கு நடிகர் சிவகார்த்திகேயன் உள்ளிட்டவர்கள் உதவி செய்வதாக வாக்குறுதி அளித்துள்ளனர். இந்நிலையில் அவர் நிகழ்ச்சிகள் மூலமாக பணம் சம்பாதித்த விஜய் தொலைக்காட்சியோ எந்த உதவியும் இதுவரை அறிவிக்கவில்லை. இந்நிலையில் வடிவேல் பாலாஜியின் நண்பரும் விஜய் தொலைக்காட்சியின் நிகழ்ச்சியின் ஜட்ஜுமான சேது ‘வடிவேலு பாலாஜியின் குடும்பத்துக்கு சேனல் உதவி செய்யவேண்டும் ‘ எனக் கோரிக்கை வைத்துள்ளார்.