பழிவாங்குவதற்காக ரெய்டு... ஈபிஎஸ் கருத்துக்கு அமைச்சர் பதிலடி!

Webdunia
வெள்ளி, 8 ஜூலை 2022 (11:43 IST)
அதிமுகவில் நிலவும் குழப்பமான சூழ்நிலைக்கும், காமராஜ் வீட்டில் நடக்கும் ரெய்டுக்கும் தொடர்பில்லை என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேட்டி. 

 
ஏற்கனவே கடந்த சில மாதங்களில் ஒரு சில அதிமுக முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் வருமான வரித்துறையினர் மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை செய்த நிலையில் தற்போது அதிமுக ஆட்சியில் உணவு துறை அமைச்சராக இருந்த காமராஜ் வீட்டில் முன்னாள் அமைச்சர் காமராஜ் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை செய்து வருகின்றனர். 
 
இந்நிலையில், எடப்பாடி பழனிசாமி முன்னாள் அமைச்சர் காமராஜ் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனைக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். திமுக அரசியல் பழிவாங்கும் செயல்களில் ஈடுபடுவதை நிறுத்துங்கள். இதை விட்டுவிட்டு மக்களுக்காக பணியாற்றுங்கள் என தெரிவித்துள்ளார். 
 
இதனைத்தொடர்ந்து அதிமுகவில் நிலவும் குழப்பமான சூழ்நிலைக்கும், காமராஜ் வீட்டில் நடக்கும் ரெய்டுக்கும் தொடர்பில்லை என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்திருக்கிறார். மேலும் அவர் யாரையும் பழிவாங்குவதற்காக ரெய்டு நடத்தப்படவில்லை. அந்த எண்ணமும் முதல்வருக்கு கிடையாது. சட்டப்படி தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அதைத்தான் எடுக்கிறது என்று அமைச்சர் ரகுபதி கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்