பயிர்க்காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இழப்பீடு பெறுவதில் டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகளின் பெயர் விடுபட்டிருப்பதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் உள்ள வேளாண் மக்களின் நலனுக்காக தமிழ் நாடு அரசு கடந்த 2021 -22 மற்றும் 2022-23 ஆம் ஆண்டு வேளாண் நிதி நிலை அறிக்கையில் பல் நடட்திட்டங்களை அறிவித்து அதைச் செயல்படுத்தி வருகிறது.
மழை, வெள்ளம், வறட்சி போன்ற இயற்கை இடர்பாடுகளில் ஏற்படும் பய்டிட் இழப்புகளில் இருந்து விவசாயிகளை பாதுகாக்க தமிழ அரசு இத்திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது.
இத்திட்டத்தின் கீழ் இழப்பீடு பெறுவதில் டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகளின் பெயர் விடுபட்டிருப்பதாக அமமுக பொதுச்செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தன் டுவிட்டர் பக்கத்தில், பயிர்க்காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இழப்பீடு பெறுவதில் டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகளின் பெயர் விடுபட்டிருப்பதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
தமிழக அரசு உடனடியாக இப்பிரச்னையைக் கவனித்து, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு பெற்றுத்தர வேண்டும்.