மோடியின் சட்டத்திற்கு எதிராக திமுக வழக்கு …

Webdunia
வெள்ளி, 18 ஜனவரி 2019 (14:39 IST)
பொருளாதார அடிப்படையில் 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்க மோடி தலைமையிலான அரசு சட்ட மசோதா கொண்டு வந்து மக்களவையிலும் மாநிலங்களவையிலும் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

பொதுப் பிரிவில் உள்ள பொருளாதார ரீதியாக பின் தங்கியவர்களுக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும் சட்ட மசோதாவை பாஜக அரசு அறிவித்தது.  இதற்கு காங்கிரஸ் மற்றும் இடதுசாரிக் கட்சிகளான தேசியக் கட்சிகள் ஆதரவு தெரிவித்த போதும், மாநிலக் கட்சிகள் இது இடஒதுக்கீடு திட்டத்தை நீர்த்துப் போகச் செய்யும் என எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.

தமிழகத்தின் ஆளும்கட்சியான திமுக மற்றும் அதிமுக இரண்டுமே இந்த இடஒதுக்கீடுக் கொள்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. மக்களவையில் அதிமுக எம்.பி. தம்பிதுரை மற்றும் திமுக எம்.பி.கனிமொழி ஆகியோர் இந்த சட்டத்தை எதிர்த்து பேசியுள்ளனர்.

ஆனால் இந்த சட்டம் மக்களவை மற்றும் மாநிலங்களவை இரண்டிலும் ஓட்டெடுப்பு மூலம் மசோதா அனுமதிக்கப்பட்டு, குடியரசு தலைவராலும் ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது. மேலும் இந்த சட்டத்தை முதன் முதலில் மோடியின் மாநிலமாக குஜராத்தில் சில தினங்களுக்கு முன்னர் அமல்படுத்தியுள்ளனர். ஆனால் இந்த இடஒதுக்கீடு அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்று கூறி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

அதைபொட்டி திமுக சார்பில் இன்று சென்னை உயர்நீதிமன்றத்திலும் இந்த சட்டத்திற்கு எதிராக மேலும் ஒரு வழக்கு தொடரப்பட்டுள்ளது. இது தொடர்பாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தாக்கல் செய்துள்ள மனுவில் ’தமிழகத்தில் ஏற்கனவே 69 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. இப்போது இந்த புதிய சட்டத்தால் ஏற்கனவே வழங்கப்பட்டுவரும் இட ஒதுக்கீட்டில் பாதிப்பு ஏற்படும். எனவே இந்த திட்டத்தை வறுமை ஒழிப்புத் திட்டமாகக் கருதமுடியாது. பொருளாதார ரீதியிலான இந்த இட ஒதுக்கீடு என்பது அரசியல் சாசனத்திற்கு எதிராக உள்ளது’. எனவே இந்த மனுவை ரத்து செய்ய வேண்டும்’ என அந்த மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்