கீ.வீரமணி வேண்டுகோளையும் மீறி பிரார்த்தனை செய்து வரும் திமுக தொண்டர்கள்

Webdunia
திங்கள், 30 ஜூலை 2018 (18:42 IST)
சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் திமுக தலைவர் கருணாநிதி நல்ல உடல்நிலையுடன் மீண்டும் திரும்ப வேண்டி தமிழகம் முழுவதும் கோவில்கள், சர்ச்சுகளில் பிரார்த்தனைகள் நடந்து வருகிறது.
 
இந்த நிலையில் திராவிட கழகத்தலைவர் கீ.வீரமணி சற்றுமுன்னர் கருணாநிதியின் உடல்நலத்திற்காக பிரார்த்தனை போன்ற மூடப்பழக்கங்களில் திமுக தொண்டர்கள் ஈடுபட வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்தார்
 
ஆனால் கீ.வீரமணியின் வேண்டுகோளையும் மீறி திமுக தொண்டர்கள் பலர் தமிழகம் முழுவதும் பிரார்த்தனையில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை நுங்கம்பாக்கம் ஏரிக்கரை மாரியம்மன் ஆலயத்தில் இன்று மாலை கருணாநிதி உடல்நலம் பெற மக்கள் கூட்டு இறைவழிபாடு நடந்தது. அதேபோல் தஞ்சாவூரில் உள்ள குழந்தை இயேசு திருத்தலத்தில் கருணாநிதி விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்று திமுக தொண்டர்கள் மண்டியிட்டு கூட்டுப்பிராத்தனை செய்தனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்