அதிமுக கூட்டணியில் பேச்சுவார்த்தை நடத்திய தேமுதிக 14 தொகுதிகள் கேட்ட நிலையில் அதிமுக கறாராக மூன்று மக்களவைத் தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்யசபா தொகுதிகள் மட்டுமே கொடுக்க முடியும், இஷ்டம் இருந்தால் பேச்சு வார்த்தையை தொடரலாம் இல்லாவிட்டால் தேமுதிக கூட்டணிக்கு தேவையில்லை என்று கூறிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில் பாஜக தரப்பிலும் தேமுதிகவுக்கு ஒரு நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது, அதிமுகவை விட ஒரு தொகுதி அதிகம் தருகிறோம் அதாவது நான்கு மக்களவைத் தொகுதி தருகிறோம், ஒரு ராஜ்யசபா தொகுதி தருகிறோம் ஆனால் ஒரு நிபந்தனை தேமுதிக நான்கு வேட்பாளர்களும் பாரதிய ஜனதாவின் தாமரை சின்னத்தில் தான் போட்டியிட வேண்டும் என்று நிபந்தனை விதித்துள்ளது.
பாஜகவின் நிபந்தனையை ஏற்று தாமரை சின்னத்தில் தேமுதிக போட்டியிடுமா? அல்லது அதிமுகவின் மூன்று தொகுதிகளை ஏற்றுக்கொண்டு தனது சொந்த சின்னமான முரசு சின்னத்தில் போட்டியிடுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.