பிரபல நடிகர் நடிகர் சத்யராஜ் அவர்களின் மகன் திவ்யா ஒரு சமூக சேவகி என்பதும் குழந்தைகளின் ஊட்டச்சத்து குறித்த ஆய்வு செய்து வருபவர் என்பதும் தெரிந்ததே. சமீபத்தில் தமிழக அரசுடன் பேசி குழந்தைகளுக்கு காலை உணவாக ஊட்டச்சத்து உணவு அளிக்க வேண்டும் என்று முயற்சி எடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் உலகம் முழுவதும் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தமிழகத்தின் தாக்கும் அபாயம் இருப்பதாக கருதப்படும் நிலையில் கொரோனா வைரசில் இருந்து தப்பிப்பது எப்படி என்று திவ்யா சில குறிப்புகளை கொடுத்துள்ளார். அவர் கொடுத்த குறிப்புகள் இதோ:
இதெல்லாம் செஞ்சா கொரோனா தாக்காது
1. இறைச்சிகளுக்கும், சமைத்த உணவுகளுக்கும் வெவ்வேறு வெட்டும் பலகைகளையும், கத்திகளையும் பயன்படுத்துங்கள்.
2) சமைத்த உணவுகளையும், இறைச்சியையும் கையாளும்போது கைகளை நன்கு கழுவிக் கொள்ளுங்கள்.
3) நன்கு சமைத்த உணவுகளையே உண்ணுங்கள்.
4) ஒருமுறை பயன்படுத்தும் முகக்கவசங்களை பயன்பாட்டுக்குப் பிறகு உடனடியாக அப்புறப்படுத்திவிடவும். அப்புறப்படுத்தியதும் கைகளை நன்கு கழுவி விடவும்.
5) இருமல் மற்றும் காய்ச்சல் இருப்பவர்களோடு நெருக்கமாக இருப்பதைத் தவிர்க்கவும்.
6) அழுக்கான ஆடைகள் மற்றும் காலணிகளை குடும்ப உறுப்பினர்களிடமிருந்து விலக்கவும்.