ஜப்பான் அரசு கொரானா பாதித்த பயணிகள் உள்ள கப்பலை கரைக்கு வரவிடாமல் கடலில் தத்தளிக்க வைத்துள்ளது.
கொரானா வைரஸ் பாதிப்பு சீனாவில் தீவிரம் அடைந்து வருகிறது. கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 630-ஐ கடந்துள்ளது. அதோடு 30,000 பேர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஜப்பானின் சொகுசு கப்பலான டைமண்ட் பிரின்சஸ் கப்பல் கடந்த மாதம் 20 ஆம் தேதி ஜப்பானின் யோகோஹாமாவில் இருந்து சீனாவில் கட்டுப்பாட்டில் இருக்கும் ஹாங்காங்கிற்கு 3,745 பேருடன் பயணித்தது.
இந்த கப்பல் மீண்டும் ஜப்பான் திரும்புகையில் கப்பலில் பயணித்த 80 வயது முதியவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் ஜப்பான் அதிகாரிகள் கப்பலை துறைமுகத்திற்குள் விட மறுத்தனர்.
இதன் விளைவாக தற்போது கப்பலில் உள்ள 61 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது சக பயணிகளை அச்சத்தில் வைத்துள்ளது. அதோடு கப்பலில் உள்ளோர்களுக்கு மருத்துவ உதவிகளும் சரிவர செய்யப்படவில்லை எனவும் கூறப்படுகிறது.