கட்சியின் வளர்ச்சி குறித்து பேசினோம்.. ராமதாஸ் சந்திப்புக்கு பின் அன்புமணி பேட்டி..!

Mahendran
ஞாயிறு, 29 டிசம்பர் 2024 (14:40 IST)
புதுச்சேரியில் பாமக நிகழ்ச்சி நடந்த போது, டாக்டர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி ராமதாஸ் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. 
 
ராமதாஸ், “நான் சொல்வதை தான் கேட்க வேண்டும், யாராக இருந்தாலும் நான் சொல்வதை கேட்கவில்லை என்றால் கட்சியில் இருக்க முடியாது,” என்று கூறியதை அடுத்து அன்புமணி பனையூரில் தனியாக அலுவலகம் தொடங்கியதாகவும், “தன்னை அங்கு வந்து சந்திக்கலாம்” என்று கூறியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
 
இந்நிலையில், ராமதாஸ், அன்புமணி ஆகிய இருவரும் இன்று பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். பேச்சுவார்த்தைக்கு பின்னர் அன்புமணி, “கட்சியின் வளர்ச்சி குறித்து பேசினோம். 
 
2026 ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தல் குறித்து ஆலோசனை செய்தோம். எங்கள் கட்சி ஜனநாயக அடிப்படையில் செயல்படும் கட்சி. ஜனநாயக கட்சிகளில் காரசாரமான விவாதங்கள் சகஜம். எங்கள் சொந்த பிரச்சனைகளை நாங்களே தீர்த்துக் கொள்வோம்,” என்று கூறினார்.
 
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்