பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் மற்றும் அக்கட்சியின் தலைவர் அன்புமணி இடையே நேற்று ஏற்பட்ட மோதல் தமிழக அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தி கவனத்தை ஈர்த்தது. புதுச்சேரியில் நேற்று நடந்த கட்சிப் பொதுக்குழுக் கூட்டத்தில், ராமதாஸ் தன்னுடைய மகள் வழிப் பேரனான முகுந்தன் பரசுராமன் என்பவரை பாமகவின் இளைஞர் சங்கத் தலைவராக நியமித்தார்.