காவலர்கள் ஹெல்மெட் அணியாவிட்டாலும் தண்டனை உண்டு

Webdunia
திங்கள், 10 ஜூன் 2019 (10:25 IST)
தமிழ்நாட்டில் தற்போது இரு சக்கர வாகன ஓட்டிகளால் ஏற்படும் விபத்துகள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகின்றன. இதை கட்டுக்குள் கொண்டு வர காவல் துறையும், போக்குவரத்து துறையும் இணைந்து பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.

குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர், வேகமாக ஓட்டுபவர், விதிமுறைகளை மீறி வாகனம் ஓட்டுபவர் என அனைவருடைய ஓட்டுனர் உரிமங்களையும் ரத்து செய்தது போக்குவரத்து துறை. கடந்த 5 மாதங்களில் மட்டும் 36 ஆயிரத்திற்கும் அதிகமான ஓட்டுனர் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சென்னை போன்ற மாநகரங்களில் ஹெல்மெட் அணியாமல் செல்பவர்கள் சிலரின் ஓட்டுநர் உரிமங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில் திண்டுக்கல் மாவட்ட காவல் அதிகாரி “ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டும்  காவலர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்” என அதிரடி அறிவிப்பினை வெளியிட்டுள்ளார். சட்டம் என்பது அனைவருக்கும் சமம் என்ற நோக்கத்தில் எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கையை திண்டுக்கள் மாவட்ட மக்கள் பாராட்டியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்