சிறுமி ஹாசினி கொலை வழக்கு ; தஷ்வந்துக்கு குற்றவாளி என தீர்ப்பு

Webdunia
திங்கள், 19 பிப்ரவரி 2018 (15:20 IST)
தமிழகத்தை மட்டுமின்றி இந்தியாவையே உலுக்கிய சிறுமி ஹாசினி  கொலை செய்த வழக்கில் தஷ்வந்த் குற்றவாளி என தீர்ப்பு தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

 
சென்னையை சேர்ந்த தஷ்வந்த் என்பவன் கடந்த வருடம் பிப்ரவரி மாதம் 7ம்தேதி, தன்னுடைய பக்கத்து வீட்டில் வசித்து வந்த ஹாசினி என்ற 6 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததோடு, சிறுமியின் உடலையும் எரித்து கொலை செய்தான். எனவே அவன் மீது வழக்கு தொடரப்பட்டது. 
 
இந்த கொடூர சம்பவத்தில் சிக்கிய போதிலும் இடையில் ஜாமீனில் வெளியே வந்த தஷ்வந்த், பெற்ற தாயை பணத்திற்காக கொலை செய்து மும்பைக்கு தப்பிவிட்டான். தனிப்படை போலீசார் மும்பை சென்று தஷ்வந்தை பிடித்து வந்து மீண்டும் சிறையில் அடைத்தனர். 
 
இதையடுத்து, செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றத்தில், கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த ஹாசினி கொலை வழக்கின் வாத,பிரதிவாதங்கள் முடிந்து, நீதிபதி வேல்முருகன் தற்போது தீர்ப்பு வழங்கினார். அதற்கு முன்பே குற்றவாளி தஷ்வந்த் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
 
அப்போது தீர்ப்பளித்த நீதிபதி, இந்த வழக்கில் தஷ்வந்த் குற்றவாளி என தீர்ப்பளித்த நீதிபதி, கொலை மற்றும் குற்றத்தை மறைத்தல் என 366,363, 354, 202, 302 போக்சோ சட்டப்பிரிவுகளின் கீழ் தஷ்வந்த் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டுள்ளது எனக் கூறியுள்ளார்.
 
எனவே தஷ்வந்துக்கு தூக்கு தண்டனை அல்லது இரட்டை ஆயுள் தண்டனை விதிக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்