யாரை எதற்கு பயன்படுத்த வேண்டும் என கழகத்திற்கு தெரியும்.. சீட் கிடைக்காத திமுக எம்பியின் டுவிட்..!

Mahendran
புதன், 20 மார்ச் 2024 (18:10 IST)
திமுகவின் 21 வேட்பாளர்கள் குறித்து அறிவிப்பு இன்று காலை வெளியான நிலையில் அதில் சீட் கிடைக்காத எம்பி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் 18 தொகுதிகளில் கூட்டணி கட்சிக்கு கொடுத்து விட்ட திமுக 21 தொகுதிகளில் போட்டியிடுகிறது என்று அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று காலை 21 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில் அதில் தர்மபுரி தொகுதியின் தற்போதைய எம்பி ஆன செந்தில்குமாருக்கு சீட் இல்லை என்ற தகவல் அவரது ஆதரவாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
இந்த நிலையில் சீட் கிடைக்காத போதிலும் அவர் தனது கட்சியை விட்டுக் கொடுக்காமல் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது:
 
5 வருடம் கழகம் கொடுத்த வாய்ப்பினை தர்மபுரி நாடாளுமன்ற தொகுதி மக்களுக்கு மனநிறைவுடன் வேலை செய்து பல்வேறு திட்டங்கள் கொண்டு வந்ததில்  மகிழ்ச்சி
 
யாரை எதற்கு பயன்படுத்த வேண்டும் என கழகத்திற்கு தெரியும்.
 
இந்த இரு வாழ்த்துகளும் 
நான் அரசியலில் சம்பாதித்த நன்மதிப்பு
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்