இது ஆன்லைன் ரம்மியில்ல.. மோசடி ரம்மி..! – தமிழக டிஜிபி எச்சரிக்கை!

Webdunia
ஞாயிறு, 29 மே 2022 (12:11 IST)
தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி விளையாட்டால் பலர் தற்கொலை செய்து கொள்ளும் நிலையில் தமிழக டிஜிபி இதுகுறித்த விழிப்புணர்வு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் மக்களிடையே ஸ்மார்ட்போன் பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில் சமீப காலமாக ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட மோசடி விளையாட்டுகளால் பாதிக்கப்பட்டு பலர் தற்கொலை செய்து கொள்வது அதிகரித்துள்ளது. தன்னிடம் இருந்த பணத்தை மட்டும் இழந்தது போதாமல், பலர் கடன் வாங்கி விளையாடி ஏமாந்து, கடனையும் கட்ட முடியாமல் தற்கொலை செய்து கொள்கின்றனர்.

இதுகுறித்து மக்களை எச்சரிக்கவும், விழிப்புணர்வை ஏற்படுத்தவும் வீடியோ வெளியிட்டுள்ள தமிழக டிஜிபி சைலேந்திரபாபு “சமீப காலமாக ஆன்லைன் ரம்மி விளையாட்டு மோசடியால் பலர் உயிரிழந்து வருகின்றனர். முதலில் ஜெயிப்பது போல காட்டி நிறைய பணத்தை இழக்க வைக்கும் வகையில் இந்த விளையாட்டு உருவாக்கப்பட்டுள்ளது. பிடித்த நடிகர் விளம்பரம் செய்கிறார் என யாரும் இந்த விளையாட்டை விளையாட வேண்டாம். இது ஆன்லைன் ரம்மி அல்ல மோசடி ரம்மி” என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்