புதிதாக கட்டப்பட்ட வடிகால் தடுப்புச்சுவர் டமால் என விழுந்ததால் பரபரப்பு

ஞாயிறு, 29 மே 2022 (00:00 IST)
மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜியின் சொந்த தொகுதியில் 25 நாட்களுக்கு முன்பு கட்டப்பட்ட வடிகால் தடுப்புச்சுவர் டமால் என விழுந்திருந்தது.
 
கரூர் மாவட்டத்தில் கடந்த இரு தினங்களாக கோடை மழையானது சிறிய அளவில் பெய்து வரும் சூழ்நிலையில்
 
கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட கொங்கு திருமண மண்டபம் சாலை முதல் ராமானுஜ நகர் வரை கழிவுநீர் வடிகால் அமைக்கும் பணியானது கடந்த ஒரு மாத காலமாக நடைபெற்று வருகிறது. கரூர் கொங்கு திருமண மண்டபம் முதல் ராமானுஜர் நகர் வரை கழிவுநீர் செல்வதற்காக வடிகால் அமைக்கும் பணிக்காக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பூமி பூஜையிட்டு துவக்கி வைத்தார். அதற்கான பணி கரூர் மாநகராட்சி பகுதிகளில் பல இடங்களில் நடைபெற்று வருகிறது.கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 29வது வார்டு பகுதி மகாலட்சுமி நகர் அருகில் கழிவுநீர் வடிகால் கட்டும் பணியானது கடந்த 25 நாட்களுக்கு முன்பாக முடிவடைந்தது. நேற்று கரூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஆங்காங்கே சிறிய அளவிலான மழையானது பெய்த நிலையில் நேற்று மாலை பெய்த மழையில் மகாலட்சுமி நகர்ப்பகுதிகளில் 25 தினங்களுக்கு முன்பாக கட்டப்பட்ட கழிவுநீர் வடிகால் தடுப்புச்சுவர் ஆனது சுமார் 150 அடி வரை டமால் என இடிந்து விழுந்தது. இதனை கண்ட பொதுமக்கள் புதிதாக கட்டப்பட்ட கருவின் கழிவுநீர் வடிகால் எவ்வாறு விழுந்தது என வியப்புடன் கேள்வி எழுப்பினர் 
 
மேலும் கழிவுநீர் வடிகால் அமைக்கும் பணியில்  ஒப்பந்ததாரர் தரமற்ற முறையில் சிமெண்ட் மணல் போன்றவற்றை உபயோகித்தது மேலும் வடிகால் தடுப்புச் சுவருக்கு இரும்பு கம்பிகள் கொண்டு காங்கிரீட் போடாமல் பெயரளவிற்கு செங்கல் மற்றும் தரமற்ற சிமெண்டின் மூலம் கட்டி முடித்து விட்டனர். என அப்பகுதி பொதுமக்கள் கூறி வருகின்றனர்
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்