சென்னை ஐ.ஐ.டி.யில் ஆந்த்ராக்ஸ் நோய்: ஒரு மான் உயிரிழந்ததால் பரபரப்பு!

Webdunia
வெள்ளி, 18 மார்ச் 2022 (08:55 IST)
சென்னை ஐ.ஐ.டி.யில் ஆந்த்ராக்ஸ் நோய்: ஒரு மான் உயிரிழந்ததால் பரபரப்பு!
சென்னை ஐஐடியில் ஆந்த்ராக்ஸ் நோய் பரவி இருப்பதாகவும் இதற்கு ஒரு மான் பலியாகியுள்ளதாகவும் வெளியாக இருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
சென்னை ஐஐடி வளாகத்தில் ஆந்தராக்ஸ் நோயால் ஒரு மான் உயிரிழந்தது கண்டு பிடிக்கப்பட்டு உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள இரண்டு மான்களுக்கு ஆந்த்ராக்ஸ் நோயின் தாக்கம் இருக்க வாய்ப்பிருப்பதாக ஐஐடி தகவல் தெரிவித்துள்ளது
 
இதனை அடுத்து அந்த மான்களுக்கு பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. சென்னை ஐஐடியில் ஆந்த்ராக்ஸ் நோய் பரவி வருவதை அடுத்து பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க ஐஐடி முடிவு செய்துள்ளது.
 
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்