மதுக்கடை வேண்டும் என வலியுறுத்தி மது குடித்து போராடியவர் மரணம்

Webdunia
புதன், 4 அக்டோபர் 2017 (12:20 IST)
கோவை மாவட்டத்தில் மதுக்கடை திறக்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் ஒருவர் அதிக அளவு மது குடித்து இறந்த சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.


 

 
தமிழகம் முழுவதும் மதுக்கடைக்கு எதிரான போராட்டம் வலுவாக உள்ளது. நாடு முழுவதும் மத்திய அரசு, நெடுசாலைகளில் உள்ள மதுக்கடைகளை மூட உத்தரவிட்டது. அப்போது தமிழகம் முழுவதும் பெரும்பாலான மதுக்கடைகள் மூடப்பட்டது. மக்கள் வசிக்கும் இடத்தில் இருந்த மதுக்கடைகள் மற்றும் புதிதாக திறக்கப்பட்ட மதுக்கடைகளுக்கு எதிராக பொதுமக்கள் போரட்டத்தில் குதித்தனர்.
 
அப்போது தமிழகம் முழுவதும் மதுக்கடைக்கு எதிராக போராட்டம் வலுவாக இருந்தது. இந்நிலையில் தற்போது கோவை மாவட்டம் செங்கத்துறை கிராமத்தில் மதுக்கடை திறக்க வேண்டும் என வலியுறுத்தி அப்பகுதி குடிமகன்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். 
 
போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் ஒருவரான ஆறுமுகம் என்பவர் நேற்று அதிக அளவில் மது குடித்ததாக கூறப்படுகிறது. காலை தூக்கத்தில் அவரை எழுப்பியபோது அவர் மயக்க நிலையில் இருந்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து அவரை மருத்துவமனையில் சேர்க்க ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டுள்ளது. அப்போது சோதனை செய்ததில் அவர் உயிரிழந்தது தெரியவந்துள்ளது.
 
மதுக்கடை கோரி போராடி மதுவால் உயிரிழந்ததால் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:-
 
மதுக்கடை வேண்டும் என்ற வலியுறுத்தி நடந்த போராட்டத்துக்கு பின்னணியில் ஆளும் கட்சியினர் உள்ளனர். குடிமகன்களை திரட்டி போராட்டம் நடத்தி, போராட்டத்துக்கு வருபவர்களுக்கு இலவசமாக மது தருவதாவும் குற்றம்சாட்டியுள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்