கரையை கடக்கும் அம்பன்: மணிக்கு எத்தனை கிமீ வேகம் தெரியுமா?

Webdunia
புதன், 20 மே 2020 (11:12 IST)
அம்பன் புயலால் தமிழகத்திற்கு பாதிப்பில்லை என தமிழக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் என தகவல். 
 
கடந்த வாரம் அந்தமான் தீவு பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு நிலையாக உருவாகி, இரண்டே நாட்களில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், அதற்கடுத்த நாளே புயலாகவும் மாறியது அம்பன். சூப்பர் புயல் என்னும் மிக அபாயமான கட்டத்தை எட்டியுள்ள அம்பன் வங்கதேசம் பகுதியில் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் முன்னர் தெரிவித்தது. 
 
சூப்பர் புயலாக இருந்து அதி தீவிர புயலாக வலுவிழந்த அம்பன் புயல் மணிக்கு 22 கி.மீ. வேகத்தில் வடக்கு திசை நோக்கி நகர்கிறது. மேற்கு வங்கத்தின் திகா மற்றும் ஒடிஷாவின் பாரதீப் பகுதி இடையே புயல் நிலைக்கொண்டுள்ளது. 
 
மேலும் வடக்கு நோக்கி நகர்ந்து வங்கதேசம், மேற்கு வங்கம் இடையே புயல் இன்று கரையை கடக்கும் என கூறப்பட்டுள்ளது. மேலும் வங்கக்கடலில் உருவான அம்பன் புயலால் தமிழகத்திற்கு பாதிப்பில்லை என தமிழக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். 
 
இது குறித்து மேலும் அவர் தெரிவித்ததாவது, புயலால் நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் அதிக கனமழைக்கு வாய்ப்பு. கடல் கொந்தளிப்புடன் காணப்படுவதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்