நாம் தமிழர் கட்சி பேரணிக்கு அனுமதி மறுப்பு: மதுரை ஐகோர்ட் கூறிய காரணம் இதுதான்..!

Webdunia
புதன், 15 மார்ச் 2023 (15:29 IST)
நாம் தமிழர் கட்சியை நடத்த இருக்கும் பேரணிக்கு அனுமதி கேட்கப்பட்ட நிலையில் அந்த பேரணிக்கு மதுரை ஹைகோர்ட் கிளை அனுமதி மறுத்து உத்தரவிட்டுள்ளது. வடமாநில தொழிலாளர்கள் வருகையை முறைப்படுத்த வலியுறுத்தி பேரணி நடத்த அனுமதி கோரி நாம் தமிழர் கட்சி மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தது. 
 
இந்த மனு என்று விசாரணைக்கு வந்த போது நாம் தமிழர் கட்சியின் மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள் உத்தரவிட்டனர். வட மாநில தொழிலாளர்கள் வருகையை முறைப்படுத்துவது தமிழக அரசின் அதிகாரத்தின் கீழ் வராது என உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள் தெரிவித்தனர். 
 
கடந்த சில ஆண்டுகளாகவே வட மாநில தொழிலாளர்கள் குறித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சிமான் சர்ச்சைக்குரிய வகையில் பேசி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்