தினகரன் தேர்தல் வெற்றி செல்லும்: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

Webdunia
செவ்வாய், 9 ஜனவரி 2018 (11:57 IST)
ஆர்கே நகர் இடைத்தேர்தலில் டிடிவி தினகரன் பணம் கொடுத்துதான் வெற்றி பெற்றார். அவரது வெற்றி செல்லாது என அறிவிக்க கோரி தொடர்ந்த வழக்கை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து, அவரது வெற்றி செல்லும் என அறிவித்துள்ளது.
 
ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற டி.டி.வி தினகரன் பணபட்டுவாடாவின் காரணமாகவே வெற்றி பெற்றிருக்கிறார். எனவே அவர் வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்கக்கோரி வழக்கறிஞர் எஸ்.வி.ராமமூர்த்தி தொடர்ந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.
 
ஆர்.கே நகரில் போட்டியிட்ட சுயேட்சை வேட்பாளரான டி.டி.வி தினகரன், வாக்காளர்களுக்கு பணம் கொடுக்காமல் வெற்றி பெற்றிருக்க முடியாது எனவும் குக்கர் சின்னம் ஒதுக்கிய பிறகு ஆர்.கே.நகரில் அதிக அளவில் குக்கர்கள் கிடைக்கப்பெற்றுள்ளது என கூறியுள்ளார்.
 
மேலும் ஆர்.கே நகரில் 30 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. எனவே தினகரன் வெற்றி பெற்றது செல்லாது என தீர்பளிக்கக் கோரியும் தினகரன் சட்டபேரவைக்கு செல்ல தடை விதிக்க வேண்டியும் வழக்கறிஞர் எஸ்.வி.ராமமூர்த்தி தனது மனுவில் கூறியிருந்தார்.
 
இந்த வழக்கை இன்று விசாரித்த நீதிபதிகள் போதிய ஆதாரம் இல்லை என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்தனர். மேலும் தினகரன் வெற்றி செல்லும் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்