தமிழகத்தில் படிப்படியாக உயரும் கொரோனா பாதிப்பு.. ஒரே நாளில் இத்தனை பேருக்கு பாதிப்பா?

Webdunia
செவ்வாய், 26 டிசம்பர் 2023 (08:00 IST)
தமிழகத்தில் படிப்படியாக கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதாக கூறப்படும் நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் 11 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.

 தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் மீண்டும் கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் நேற்று ஒரே நாளில் நாடு முழுவதும் 656 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

புதிய வகை கொரோனா வைரஸ் பரவல் காரணமாக  தமிழக மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. நேற்று ஒரே நாளில் தமிழ்நாட்டில் 11 பேருக்கு புதிய வகை ஜெ.என்.1 என்ற வகை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் சென்னையில் மட்டும் 5 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிடுகிறது

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நேற்று 128 ஆக இருந்த நிலையில், இன்று 139 ஆக உயர்ந்துள்ளது. மேலும் நேற்று  4 பேர் கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளதாக கூறப்படுகிறது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்