புதிய வகை கொரோனா வைரஸ்க்கு மீண்டும் தடுப்பூசியா? மத்திய சுகாதாரத்துறை

திங்கள், 25 டிசம்பர் 2023 (14:19 IST)
கொரோனா வைரஸ் பரவலுக்கு தடுப்பூசி தேவையில்லை என மத்திய சுகாதாரத்துறை விளக்கம் அளித்துள்ளது. 
 
கடந்த சில நாட்களாக இந்தியாவில் மீண்டும் கொரானா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜெஎன் 1 என்ற புதிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் விஸ்வரூபம் எடுத்து வரும் நிலையில் சளி இருமல் காய்ச்சல் வயிற்றுப்போக்கு போன்ற உபாதைகள் இருந்தால் உடனடியாக மருத்துவமனை சென்று பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. 
 
ஆனால் அதே நேரத்தில் புதிய வகை ஜெஎன் 1 வகை கொரோனா வைரஸை கட்டுப்படுத்த தடுப்பூசி தேவையில்லை என்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மட்டும் எடுத்துக் கொண்டால் போதும் என்றும் குறிப்பாக மாஸ்க் அணிதல் , கை கழுவுதல் போன்றவைகளை கடைபிடித்தால் போதும் என்று மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது உடனடி
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்