15 ஆயிரம் போலீஸாருக்கு கொரொனா பரிசோதனை

Webdunia
புதன், 29 ஏப்ரல் 2020 (17:58 IST)
சென்னையில் 15 ஆயிரம் போலீஸாருக்கு கொரொனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தினமும் கொரோனா தாக்கம் அதிகரித்து வருகிறது.  ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால், போலீஸார் ரோந்து பணியில் ஈடுபட்டுவருகின்றனர். சென்னையில் மட்டும் சுமார் 19 ஆயிரம் போலீஸார் பணியில் உள்ளனர். 

இவர்களில் 15 ஆயிரம் போலீஸாருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது.

இதில் ஆரம்பநிலை போலீஸார் முதற்கொண்ட்கு உயர் அதிகாரிகள் வரை அனைவருக்குமே இந்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், காவல் நிலையங்களில் பணிபுரியும் போலீஸார் அனைவரும் கொரோனா பரிசோதனை மேற்கொண்டார்களா என்பதை இன்ஸ்பெக்டர்கள் உறுதி செய்ய வேண்டும் என உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்