ஆளுநரின் அதிரடி ஆய்வு: தமிழக அரசியலில் பரபரப்பு....

Webdunia
செவ்வாய், 14 நவம்பர் 2017 (17:58 IST)
கோவையில் மாவட்ட ஆட்சியர், சட்டமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகள் உடன் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்  ஆலோசனை நடத்தி வருகிறார்.


 
 
ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் தமிழக அரசியல் மத்திய அரசின் பிடியில் சிக்கி தவித்து வருகிறது. தற்போது நடைபெற்ற இதற்கு முன்னர் நடைபெற்ற அதிரடி ரெய்ட் நடவடிக்கைகள் இதற்கு சிறந்த சான்றாகும்.  
 
இந்நிலையில் இன்று தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கோவை மாவட்டத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டுள்ளார். மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். 
 
மாவட்ட நிர்வாகத்தில் தலையிட ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என்று ஒருதரப்பினர் கூறுகின்றனர். ஆளுநர் விதிகளை மீறி மாவட்ட நிர்வாகிகளை சந்தித்துள்ளார் என்பது சட்ட வல்லுநர்களின் கருத்து. 
 
புதுச்சேரியில் துணை நிலை ஆளுநர் கிரண்பேடி இது போன்று அதிகாரிகளை சந்திப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவதால் அந்த மாநில அரசுக்கும், கிரண்பேடிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது எனபது குறிப்பிடத்தகக்து.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்