ரெய்டுகளால் பரபரத்துக்கிடக்கும் தமிழகம்: தூக்கி வீசப்பட்ட 2000 ரூபாய் கட்டுகள்!

செவ்வாய், 14 நவம்பர் 2017 (10:44 IST)
சசிகலா குடும்பத்தை குறிவைத்து தமிழகத்தில் நடைபெற்ற இந்தியாவின் மிகப்பெரிய வருமான வரித்துறை சோதனையை நாடே பேசிக்கொண்டு இருக்கிறது. இந்நிலையில் ஈரோட்டில் பேருந்து நிலையத்தில் கட்டு கட்டாக 2000 ரூபாய் நோட்டுகள் கிடந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 
 
ஈரோடு பேருந்து நிலையத்தில் நேற்று முந்தினம் இரவு 7  மணியளவில் ஒரு மஞ்சள் பை தனியாக கிடந்துள்ளது. வெகுநேரமாகியும் அது கேட்பாரற்று கிடந்ததால் அங்கு பழ வியாபாரம் செய்து வரும் ஒருவர் அதனை கவனித்து பையை திறந்து பார்த்தபோது அதில் கட்டுக்கட்டாக புதிய இரண்டாயிரம் ரூபாய் கட்டுகள் இருந்துள்ளது.
 
அதில் இருந்து பணம் பல லட்சங்களில் இருந்து கோடியை தொடலாம் என்பதால் அதிர்ச்சியடைந்த அந்த நபர் இது குறித்து அருகில் உள்ள காவல் நிலையத்தில் தெரிவித்து பணத்தை ஒப்படைத்துள்ளார். தமிழகத்தில் தற்போது சசிகலா குடும்பத்தை குறி வைத்து வருமான வரித்துறை அதிரடியாக சோதனை நடத்தி வருவதால் இந்த ரெய்டில் இருந்து தப்பிக்க ஒரு கும்பல் இப்படி பணத்தை பல இடங்களில் வீசிச்சென்றுவிட்டு போயிருக்கலாம் என அரசியல் வட்டாரத்தில் சந்தேகிக்கப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்