கோமியம் விவகாரம்: ஐஐடி இயக்குனருக்கு ஜோஹோ சி.இ.ஓ ஸ்ரீதர் வேம்பு ஆதரவு..!

Mahendran
வியாழன், 23 ஜனவரி 2025 (10:34 IST)
சென்னை ஐஐடி இயக்குனர் காமகோடி என்பவர் கோமியம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த நிலையில், இது குறித்து அரசியல்வாதிகள் மற்றும் நெட்டிசன்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர் என்பதை பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில் பசுவின் கோமியத்தில் மருத்துவ குணங்கள் இருப்பது உண்மைதான் என ஜோஹோ நிறுவனத்தின் சிஇஓ ஸ்ரீதர் வேம்பு ஐஐடி இயக்குனரின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் சென்னையில் உள்ள ஐஐடி இயக்குனர் பேராசிரியர் காமகோடி சிறந்த ஆராய்ச்சியாளர் மற்றும் கல்வியாளர். கோமியத்தின் நன்மை குறித்து அவர் அறிவியல் கட்டுரைகளை மேற்காட்டி உள்ளார். நவீன அறிவியல் நம் பாரம்பரியத்தின் அறிவின் மதிப்பை அதிக அளவில் அங்கீகரித்து வருகிறது. ஆனால் ஒரு சில ஆன்லைன் கும்பலை சேர்ந்தவர்கள் மட்டுமே அறிவியல் பூர்வ அடிப்படையில் இல்லாமல் பாரபட்சமாக அவருக்கு எதிரான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

கோமியத்தை எதிர்ப்பவர்களுக்கு குடல்  தொற்றுக்கு ஆரோக்கியமான நபரிடமிருந்து மலத்தைப் பெற்று அதனை மாற்றி அமைத்து அறுவை சிகிச்சை இருப்பது குறித்து தெரியாது என்று கூறியுள்ளார். இதனை அடுத்து அவரையும் நெட்டிசன்கள் விமர்சனம் செய்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்