எச்.ராஜா மீது காவல் நிலையத்தில் புகார்- கைது செய்யப்படுவாரா?

Webdunia
செவ்வாய், 6 மார்ச் 2018 (17:50 IST)
பெரியார் சிலை உடைப்பது தொடர்பாக கருத்து தெரிவித்த எச்.ராஜா மீது தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
 
பாஜக தேசிய தலைவர் எச்.ராஜா நேற்று திரிபுராவில் லெனின் சிலை அகற்றப்பட்டது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் , ' 'லெனின் யார், அவருக்கும் இந்தியாவுக்கும் என்ன தொடர்பு. கம்யூனிசத்திற்கும் இந்தியாவிற்கும் என்ன தொடர்பு. இன்று திரிபுராவில் லெனின் சிலை, நாளை தமிழகத்தில் சாதி வெறியர் ஈவேரா சிலை.. என்று பதிவு செய்திருந்தார்.
 
இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் ஸ்டாலின், வைகோ, சீமான், தொல்.திருமாவளவன், சுப.வீரபாண்டியன் உள்ளிட்டோர் எச்.ராஜாவின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்தனர். தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், பெரியார் சிலை உடைப்பது தொடர்பான எச்.ராஜா கருத்துக்கும் பாஜகவுக்கும் எந்த சம்பந்தமில்லை என்று பேசினார்.
 
இந்நிலையில் பெரியார் சிலை உடைப்பது தொடர்பாக கருத்து தெரிவித்த எச்.ராஜா மீது தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் கோவை காவல் ஆணையர் அலுவகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்