பள்ளிகளை தொடர்ந்து கல்லூரிகளுக்கு விடுமுறை? – அரசு ஆலோசனை என தகவல்!

Webdunia
ஞாயிறு, 21 மார்ச் 2021 (14:00 IST)
தமிழகத்தில் கொரோனா காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா மீண்டும் வேகமாக பரவ தொடங்கியுள்ள நிலையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 11 பள்ளிகளில் 168க்கும் அதிகமான மாணவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் தமிழகம் முழுவதும் கொரோனா காரணமாக 10,11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை முதல் காலவரையற்ற விடுமுறை வழங்கப்பட்டுள்ள நிலையில் கல்லூரி மாணவர்களுக்கும் கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா பாதிப்பை கருத்தில் கொண்டு கல்லூரி மாணவர்களுக்கும் விடுமுறை வழங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்