ராகுல்காந்தியைப் பார்த்து உணர்ச்சி வசப்பட்ட கல்லூரி மாணவி… இணையத்தில் வைரலாகிய வீடியோ!

Webdunia
வியாழன், 18 பிப்ரவரி 2021 (08:39 IST)
ராகுல்காந்தியின் புதுச்சேரி வருகையை ஒட்டி அவர் பெண்கள் கல்லூரியில் ஒரு நிகழ்வில் கலந்துகொண்டார்.

புதுச்சேரியின் பரபரப்பான சூழ்நிலைகளுக்கு இடையே நேற்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி அங்கு வருகை புரிந்தார். அங்கு பல நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட அவர், பெண்கள் கல்லூரியில் நடந்த நிகழ்வு ஒன்றிலும் கலந்துகொண்டார்.

அப்போது மேடையில் ராகுல் நின்று கொண்டிருந்த போது அவரின் அருகே வந்த ஒரு மாணவி, அவரிடம் ஆட்டோகிராப் கேட்டார். பேப்பரை வாங்கி ராகுல் கையெழுத்து போடும்போது அந்த பெண் மகிழ்ச்சியில் குதிக்க ஆரம்பித்தார். அவர் உணர்ச்சி வசப்பட்டதை பார்த்த ராகுல்காந்தி, அந்த பெண்ணோடு சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்டு அவரிடம் சில வினாடிகள் பேசினார். அந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்