சமூக வலைதளவாசிகளுக்கு மிகவும் தெரிந்த கலெக்டரான ரோஹினி மத்திய அரசின் உயர்கல்வித்துறைதுணைச்செயலாளராக மாற்றப்பட்டுள்ளார்.
சேலம் மாவட்ட ஆட்சியராக இருந்த கலெக்டர் ரோஹினி தமிழக மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வந்தார் ஆனார். அவர் செல்லும் நிகழ்ச்சிகள், மக்கள் குறைதீர்ப்பு முகாம்கள் என அனைத்தில் இருந்தும் அவர் தீவிரமாக வேலை செய்வது போல புகைப்படங்கள் வெளியாகும். இதனால் அவருக்கு ரசிகர்கள் உருவாகி ரோஹினி ஆர்மி என்ற இணையப்பக்கமும் உருவாக்கப்பட்டது. ஆனால் அதேசமயம் அவர் மீது விமர்சனங்களும் எழுந்தன.
இந்நிலையில் 2 ஆண்டுகளாக சேலம் மாவட்ட ஆட்சியராக இருந்த அவர் 4 மாதங்களுக்கு முன்னர் தமிழ்நாடு இசை கவின் கலைக் கல்லூரியின் பதிவாளராக பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்திருந்தது. இதையடுத்து அவர் அந்த பதவியை ஏற்ற நான்கே மாதங்களில் மீண்டும் இப்போது அவரை மத்திய அரசின் உயர்கல்வித்துறை துணைச் செயலாளராக இடமாற்றம் செய்துள்ளார்.