உணவகத்தை தாக்கிய காவலர் பணி மாற்றம்! – வீடியோ வைரலான நிலையில் நடவடிக்கை!

Webdunia
திங்கள், 12 ஏப்ரல் 2021 (11:15 IST)
கோவையில் உணவகத்தில் வாடிக்கையாளர்கள், உரிமையாளரை தாக்கிய காவலர் பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழகம் முழுவதும் கொரோனா காரணமாக பல்வேறு புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி முன்னதாக உணவகங்கள் 9 வரை செயல்படலாம் என முதலில் அறிவிக்கப்பட்டிருந்தாலும் பின்னர் 50 சதவீத வாடிக்கையாளர்கள் அமர்ந்து சாப்பிட 11 மணி வரை நேரம் நீட்டிக்கப்பட்டது.

இந்நிலையில் கோவை காந்திபுரம் பகுதியில் இரவு 10.30 மணியளவில் பயணிகள் சிலர் உணவகம் ஒன்றில் சாப்பிட்டுக் கொண்டிருந்துள்ளனர். அப்போது அங்கு வந்த காவல் உதவி ஆய்வாளர் முத்து என்பவர் உணவகத்தை மூட சொல்லியதுடன், உணவருந்தி கொண்டிருந்தவர்களையும் லத்தியால் தாக்கியுள்ளார். இதுகுறித்து சிசிடிவி காட்சிகள் வைரலானதுடன், உணவக உரிமையாளரும் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதை தொடர்ந்து எஸ்.ஐ முத்து மேல் நடவடிக்கை எடுத்துள்ள காவல்துறை அவரை கட்டுப்பாட்டு அறைக்கு பணி மாற்றம் செய்து நடவடிக்கை எடுத்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்