இந்நிலையில் கோவை காந்திபுரம் பகுதியில் இரவு 10.30 மணியளவில் பயணிகள் சிலர் உணவகம் ஒன்றில் சாப்பிட்டுக் கொண்டிருந்துள்ளனர். அப்போது அங்கு வந்த காவல் உதவி ஆய்வாளர் முத்து என்பவர் உணவகத்தை மூட சொல்லியதுடன், உணவருந்தி கொண்டிருந்தவர்களையும் லத்தியால் தாக்கினார். இதனால் பெண் உட்பட மூவர் காயமடைந்துள்ளனர். 11 மணி வரை உணவகங்கள் இயங்க அனுமதி உள்ள நிலையில் 10.30 மணியளவில் காவலர் இந்த தாக்குதலை நடத்தியது சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ள நிலையில் பலர் இந்த தாக்குதல் சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.