இந்தியா முழுவதும் திராவிட மாடல் ஃபார்முலா.. கவர்னருக்கு முதல்வர் ஸ்டாலின் பதிலடி..!

Webdunia
வியாழன், 4 மே 2023 (14:03 IST)
திராவிட மாடல் ஒன்று இல்லை என்றும் திராவிட மாடல் காலாவதி ஆகிவிட்டது என்றும் காலாவதி ஆன கொள்கையை மீண்டும் புதுப்பிக்கும் முயற்சி நடைபெற்று வருகிறது என்றும் தமிழக ஆளுநர் ரவி சமீபத்தில் அளித்த பேட்டியில் தெரிவித்திருந்தார்.
 
மேலும் திராவிட மாடல் என்பது ஒரே நாடு ஒரே பாரதம் என்று கொள்கைக்கு எதிரானது என்றும் அவர் கூறியிருந்தார். கவர்னரின் இந்த பேட்டிக்கு ஏற்கனவே பலர் கண்டனம் தெரிவித்த நிலையில் தற்போது தமிழக முதல்வர் முக ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டின் திராவிட மாடலே இனி இந்தியாவின் அனைத்து மாநிலங்களுக்குமான ஆட்சி நிர்வாக ஃபார்முலா என்பது உறுதியாகியிருக்கிறது
 
திராவிட மாடல் அரசின் சமூகநலத் திட்டங்களை, மக்களை மேம்படுத்தும் திட்டங்களை, மாநிலத்தை முன்னேற்றப் பாதையில் பயணிக்கச் செய்யும் திட்டங்களை இலவசத் திட்டங்கள் என்றும், இலவசத் திட்டங்களால் சீரழிவு ஏற்பட்டுவிட்டதாகவும் இழிவாகப் பேசியவர்கள் இப்போது கர்நாடக சட்டமன்றத் தேர்தல் களத்தில் என்னென்ன வாக்குறுதிகளை வழங்கியிருக்கிறார்கள் என்பதிலிருந்து அவர்களின் இரட்டை வேடம் அம்பலப்படுத்தப்பட்டுள்ளது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்